கைவரிசையை காட்டிய பெண்கள்! நகைக்கடைக்குள் நடந்த கூத்து! சிசிடிவி காட்சி வெளியீடு!

688

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் தருண் குமார். இவர் அப்பகுதியில் எஸ் எம் ஜூவல்லரி என்ற நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

கடையில் சிறு சிறு பொருட்களாக 150 கிராம் நகைகளை ஒரு சிறிய பெட்டியில் வைத்துள்ளார். நேற்று இவருடைய கடைக்கு வந்த 2 பெண்கள் நகை வாங்குவது போல வந்து தருண்குமாரின் கவனத்தை திசைதிருப்பி நகை இருந்த பெட்டியை திருடி சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் ஒரு பெண் கடை உரிமையாளரிடம் நகைகளை காட்ட சொல்வது போல கவனத்தை திசை திருப்புகிறார். மற்றொரு பெண் கடை உரிமையாளர் அசந்த நேரத்தில் கீழே நகை இருந்த பெட்டியை எடுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை போலீசார் நகைகளை திருடிச் சென்ற சென்ற பெண்களை தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of