திமுக ஆட்சி அமைக்குமா? – கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்..!

318

திமுக ஆட்சி அமைக்குமா என்ற நிருபரின் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்து பதிலளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும்.

யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது என்பது சிம்ம சொப்பனம்தான்.

கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால்தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்று கிண்டலடித்துள்ளார்.

மேலும், தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வர வேண்டும் என்பதற்காகவே குரூப்-2 தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of