சேவலும் – இரட்டை இலையும் – ஜெ., வின் அரசியல் பிரவேசம்

811

மக்களால் நான் மக்களுக்காக நான்!
தமிழக அரசியலில் கடந்தகாலத்தில் இந்த வாசகத்தை கேட்காமல் எவராலும் அரசியல் செய்திருக்க முடியாது. ஆம்…

தன்னுடைய கனீர் குரலால் மக்களை தன் வசமாக்கி, இரும்புப்பெண்மணி என்று அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா.

இவரது அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜெயலலிதா, தனது தொண்டர்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட ஜெயலலிதா, அதன் மூலம் சாதனைகளை தன்வசமாக்கினார்.

1987 ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக வில் பிளவு ஏற்பட்டு ஜெயலலிதா ஓரணியாகவும், எம்ஜிஆர் மனைவி ஜானகி ஓரணியாகவும் இருந்தனர்.1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இரண்டு அணிகளுமே இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இரண்டு அணிக்கும் இரட்டை இலைச்சின்னம் வழங்கப்படாமல் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இந்த தருணம் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய சவலாகவே பார்க்கப்பட்டது.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

அந்த நேரத்தில் தங்களது சின்னங்களான புறாக்களையும்,சேவல்களையும் பறக்கவிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அப்போது இந்த விவகாரம் பூதாகரமானது. பறவைகளை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் இரு அணிகள் மீதும் பாய்ந்தன.

இதனையடுத்து இனிமேல் விலங்குகளும்,பறவைகளும் சின்னங்களாக வழங்கப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, 27 இடங்களில் வெற்றிப் பெற்று உள்ளே நுழைந்தது அதிமுக ஜெயலலிதா அணி. தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. இதனையடுத்து ஜானகி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதும், இரண்டான அதிமுக ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டது.
இதனையடுத்து 1989-ல் அமைந்த திமுக ஆட்சி விரைவில் கலைக்கப்பட்டது. ராஜீவ் படுகொலை பின்னணியில் நடந்த 1991 தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. சட்டப்பேரவையில் தொகுதிகளைப் பிடித்ததோடு தமிழகம் – புதுவையின் 40 தொகுதிகளையும் வென்றது. காங்கேயம், பர்கூரில் இரு தொகுதிகளிலும் வென்றார் ஜெயலலிதா.

அடுத்தடுத்த வெற்றிகளால் தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமைந்த ஜெயலலிதா, தமிழகத்தின் அரசியல் தலைவர்களில் முக்கிய சாம்ராஜ்யமாக உருவெடுத்தார். ஜெயலலிதாவின் ஆட்சியில் பல்வேறு அரசியல் நகர்வுகள் அதிரடியாய் அமைந்தாலும், தனது கட்சியினரை கட்டுக்குள் வைத்திருக்கும் தந்திரத்தை இறுதி வரை பயன்படுத்தினார்.

இதனையடுத்து பாஜக வுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, வாஜ்பாய் பிரதமரான பிறகு, அவராலேயே அந்த ஆட்சி கலைக்கப்பட்டது.அதன் பிறகான காலக்கட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை தவிர்த்து வந்தார்.

சென்னையில் நடந்த ஒரு மாநாட்டில் ஜெயலலிதா உரையாற்றினார். அந்த உரை அவருடைய அரசியல் சாணக்யத்தனத்தில் முக்கியத்துவம் வாயந்ததாகவே பார்க்கப்படுகிறது. “ நான் தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறை எனது வாழ்க்கையில் செய்யமாட்டேன்.

பாஜக வுடன் இனிமேல் அதிமுக கூட்டணி வைக்காது என்று உத்தரவாதம் அளித்தார் ஜெயலலிதா. அதை தனது கடைசி தேர்தல் வரை கடைபிடித்தும் காட்டினார். தமிழக அரசியல் வரலாற்றில் இவ்வளவு வைராக்கியம் யாருக்கும் இருக்காது என்கிற அளவிற்கு அவரது வைராக்கியமும், சாணக்யத்தனமும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கைக்கு பாடமாகவே அமையும்.

இப்படி அவரது வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்தும், அரசியல் வாழ்க்கையில் குறுகிய காலக்கட்டத்தில் பல சாதனைகளை செய்தும், அவரது வாழ்க்கையின் கால அளவு மிகவும் குறைவானது அவரது துர்திர்ஷடமே…

தனது 60 ஆம் வயதை கடந்தபொழுது ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் இது என்னுடைய கடைசி பிறந்த நாளாக இருக்கலாம் என நெகிழ்ச்சியோடு கூறுவார் ஜெயலலிதா. அதற்கு முக்கிய காரணம் அவரது குடும்பத்தில் யாரும் 60 வயதை கடந்து உயிருடன் இருந்ததில்லை என்பதுதான்.
ஜெயலலிதா கூறியதைப்போன்று அவருக்கான வா

ழ்க்கை கால அளவு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்பதே நிதர்சனம்.. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இம்மண்ணை விட்டு மறைந்தார் ஜெயலலிதா..
அவர் இல்லாத தமிழகம் விழிபிதுங்கி நிற்கிறது. அவர் கட்டிக்காத்த அதிமுக என்னும் கோட்டை பிளவுகளால் உடைந்து நிற்கிறது.
அவரது மறைவு தமிழகத்தில் ஈடு செய்யமுடியாத இழப்பு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை..

– எழுதுகோல் கர்ஜனை

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of