மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி..! -அஸ்ஸாம், ம.பி. யை தொடர்ந்து அதிரடி முடிவெடுத்த ஜார்கண்ட் காங்கிரஸ்..!

355

ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

 கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை இந்திய அளவில் சந்தித்தது. இந்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தோல்வியடைந்த மாநிலங்களில் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

 இதில் மத்திய பிரதேசம்,ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினர். இந்த நிலையில் தற்பொழுது ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் குமார் பதவி விலகுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.