ஜார்கண்ட் இளைஞர் கொலை – காங்கிரஸ் எம்.பி-க்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

734

ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த மாநிலத்தையும் இழிவாக பேசுவது தவறானது என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், 12 மணி நேரம் இஸ்லாமியர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் அனுமான் சொல்லச் சொல்லி கடுமையாக இரக்கமில்லாமல் அடித்துள்ளனர்.

அவர், ஒரு நாளில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி குலாம் நபி ஆசாத், ‘பழைய இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகள் ஏதும் இல்லை. அன்பும் அரவணைப்பும்தான் இருந்தது.

வெறுப்புணர்வு நிறைந்த இந்தியாவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். ஜார்கண்ட் மாநிலம் கும்பல் கொலைகளின் ஆலையாக மாறியுள்ளது என்று பேசினார்.

அதற்கு பதிலளித்த மோடி, ‘ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கும்பல் கொலை வேதனையளிக்கிறது. இதற்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்.

ஆனால், சிலர் ஜார்கண்ட் மாநிலம் கும்பல் கொலையின் ஆலை என்று கூறுகின்றனர். இது சரியா? அவர்கள் ஏன் ஒரு மாநிலத்தை இழிவுபடுத்துகிறார்கள்? ஜார்கண்ட் மாநிலத்தை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை கிடையாது’ என்று தெரிவித்தார்.