காஜலுக்கு டச்சப் பாயாக மாறிய விஜய்..! சேட்டை செய்த ‘தளபதி’..!

2579

இயக்குநர் நேசன் இயக்கத்தில், விஜய் மற்றும் மோகன் லால் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் ஜில்லா.

இமான் இசையமைத்த இந்த திரைப்படத்தில், காஜல் அகர்வால், சூரி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற, எப்ப மாமா ட்ரீட் என்ற பாடலில், விஜயும், காஜலும் நடனமாடி அசத்தியிருப்பார்கள்.

இந்நிலையில், இப்பாடலின் ஷீட்டிங்கின்போது, காஜலுக்கு டச்சப்பாயாக நடிகர் விஜய் மாறியிருக்கிறார்.

அதாவது, காஜல் நடனமாடிக்கொண்டு இருக்கும்போது, விஜய் விளையாட்டாக, டச்சப் பாய் போன்று கண்ணாடியை காட்டுகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertisement