அந்த குறுந்தகவல்களை கண்டு ஏமாறாதீர்கள்..! -ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு..!

646

போலியாக வரும் குறுந்தகவல்களை கண்டு ஏமாறவேண்டாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ வழங்கும் சலுகைகள் அனைத்தும் மைஜியோ செயலி அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டுமே அறிவிக்கப்படும்.

மற்ற குறுந்தகவல் மூலம் வரும் சலுகை மற்றும் அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலங்களில் அதிக போலி தகவல்கள் பரப்பப்படுவதால், அதன்மூலம் சாதனங்களில் பாதிப்பு ஏற்படுத்தும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு, மால்வேர் பாதிப்பு ஏற்படுகின்றன. எனவே இதுபோன்ற குறுந்செய்திகளை நம்ப வேண்டாம் என ஜியோ தெரிவித்து வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of