ஜியோவின் அடுத்த அதிரடி ப்ளான்.. சர்ப்ரைஸ் கொடுக்கும் அம்பானி..!

1312

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பான ஜியோ இண்டெர்நெட் சேவையில் புதிய அறிமுகம் ஒன்றை செய்துள்ளது.

அம்பானியின் நிறுவனமான ஜியோ நிறுவனம் வந்தபிறகு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒரு சில நிறுவனங்கள் இழுத்துமூடும் நிலையும் ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் அதன் அதிரடி ஆஃபர்கள் தான். எந்த நிறுவனமும் கொடுக்க முடியாத ஆஃபர்களை கொடுத்ததால் பல லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவை நோக்கி படையெடுத்தனர்.

இந்த நிலையில், தற்பொழுது அந்த நிறுவனம் புதிய அறிமுகமாக ஜியோ ஜிகாஃபைபர் என்னும் ஒரு பிராட்பாண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்ட்பாண்ட் 700 ரூபாய் முதல் 10000 வரை ப்ளான்கள் இருக்கும் எனவும் இண்டெர்நெட் வேகம்100 mbps முதல் 1Gbps வரை இருக்கும் எனவும் அம்பானி தெரிவித்துள்ளார்.  இந்த பிராட்பாண்டிற்கான ப்ளான் விபரங்களை இன்று வெளியிடுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
Advertisement