“இனி தான் ஆட்டமே..” ஏர்டெல் வோடஃபோனை தொடர்ந்து ஜியோவின் அதிரடி முடிவு..!

1144

ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து, ஜியோவும் செல்போன் சேவை கட்டணத்தில் மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடி காரணமாக ஏர்டெல் நிறுவனமும், வோடபோனும் தங்களின் சேவைக் கட்டணத்தை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்தன.

இந்நிலையில், இந்தியாவின் மிக பெரிய மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ஜியோவும் தனது கட்டணத்தில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த கட்டண மாற்றத்தால் மற்ற சலுகைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு ஜியோ இணங்கும் என்று தெரிவித்துள்ளது.