JNU வன்முறை.. தடை உத்தரவை மீறி மாணவர்கள் போராட்டம்

409

ஜே.என்.யு. மாணவர்கள் மீதான வன்முறையை கண்டித்து, தடை உத்தரவை மீறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமூடி அணிந்த மர்ம கும்பல், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. கற்களை வீசியும், இரும்பு தடிகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஜே.என்.யு. மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்களும், பேராசிரியர்களும் படுகாயமடைந்தனர்.

இதை கண்டித்து தடை உத்தரவை மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாலர் சீதாராம் யெச்சூரி, ஜே.என்.யு. மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் தலைமையில் மாணவர்கள் டெல்லி மண்டி இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதனிடையே வன்முறைக்கு எதிராக ஜே.என்.யு. பல்கலைக்கழகத்திற்கு முன்பு காவல்துறையினரின் தடுப்பை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of