பிரபல நிறுவனத்திற்கு ‘தலை வலியை’ ஏற்படுத்திய தடுப்பூசி பரிசோதனை..!

1540

உலகத்தின் குடுமியை தற்போது கையில் வைத்திருப்பது பெருந்தொற்று தான். பல்வேறு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கவலைக்குள்ளாக்கிய இந்த வைரசால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. அதில், ஒன்று தான் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம். அமெரிக்காவை தலையிடமாக கொண்ட இந்நிறுவனம் ஏ.டி. 26. சி.ஓ. வி2 என்ற பெருந்தொற்று தடுப்பூசி சோதனை முயற்சியில் உள்ளன.

இந்த சோதனையின் 3வது கட்டத்தில் திடீரென தடுப்பூசியின் பரிசோதனையை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை ஆய்வில் பங்கு பெற்ற ஒருவருக்கு ஏற்பட்ட விவரிக்கப்படாத நோய் காரணமாக, தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement