மீண்டும் ரஜினியுடன் இணைகிறாரா “சந்திரமுகி” | Super Star 168

507

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் பட வெளியீட்டின் வேலைகள் நடந்துவருகிறது.
இந்நிலையில் தற்போது ரஜினி 168 படம் குறித்த தகவல் அண்மையில் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் ஆக்‌ஷன் கலந்த குடும்பம் மற்றும் ரசிகர்கள் கொண்டாடக் கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of