அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..!

533

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். குழந்தைகள் வார்டுக்கான மருத்துவ உபகரணங்கள், சீரமைப்பு நிதி ஆகியவற்றை நடிகை ஜோதிகா வழங்கியிருப்பதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நன்றி தெரிவி்த்தனர்.

சிலமாதங்களுக்கு முன் படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்றிருந்த நடிகை ஜோதிகா, அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலை குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.

இதையொட்டி தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஜோதிகாசார்பில் இயக்குநர் சரவணன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார்.

அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் சேரும் போது,சிறப்பான முன்னுதாரணம் ஏற்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement