பத்திரிகையாளர் கொலை வழக்கு – ஐவருக்கு மரண தண்டனை

374

ஜமால் கஷோகி, சவுதி நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர். இவர் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்ற நிலையில் மீண்டும் அவர் நாடு திரும்பவில்லை என்று கூறப்பட்டது. மேலும் அவர் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு அறிவித்தது.

ஆனால் ஆரம்பத்தில் அவர் இறந்ததை முற்றிலும் மறுத்த சவுதி அரசு, பின்னர் அவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது. இச்சம்பவத்தால் துருக்கிக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டது.

சவுதி பட்டத்து இளவரசர் சல்மானை கடுமையாக விமர்சித்ததற்காக பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதாகவும், ஜமால் கொலை செய்யப்பட்டு, அவரின் விரல் சவுதி மன்னருக்குப் பரிசாக அளிக்கப்பட்டதாகவும், அந்த கொலைக்கு பின்னணியில் சல்மான் இருந்ததாகவும் துருக்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

ஆனால் இதை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று சவுதி அரேபியாவின் அரசு வக்கீல் நேற்று தெரிவித்தார்.