கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதிமன்றம் நின்றுள்ளது – நக்கீரன் கோபால்

784

ஆளுநர் பணியில் தலையிட்டதாக வந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதிமன்றம் நின்றுள்ளதாக நக்கீரன் கோபால் தெரிவித்தார்.

காமக்கொடுமுகி நிர்மலா தேவி தொடர்பாக நக்கீரன் இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து எழுதப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்த போலீசார் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் கோபால் மீது பிரிவு124-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு எழும்பூர் 13 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், வழக்கு தொடர்பாக முகாந்திரம் இல்லை என கூறி, கோபால் மீது பதிவு செய்யப்ட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் ஆசிரியர் கோபால், கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதிமன்றம் நின்றுள்ளது என தெரிவித்தார்.