ஆளுநர் பணியில் தலையிட்டதாக வந்த புகாரில் கைதான நக்கீரன் கோபால் விடுவிப்பு

631

ஆளுநர் பணியில் தலையிட்டதாக வந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

காமக்கொடுமுகி நிர்மலா தேவி தொடர்பாக நக்கீரன் இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் ‘பூனைக்கு மணிக்கட்டிய நக்கீரன், பொறியில் சிக்கிய கவர்னர்! சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாவுக்கு ஆபத்து’ என்ற வாசகத்துடன் ஆளுநரின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் துணைச்செயலாளர் செங்கோட்டையன், அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்த போலீசார் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் கோபால் மீது பிரிவு124-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு எழும்பூர் 13 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், வழக்கு தொடர்பாக முகாந்திரம் இல்லை என கூறி, கோபால் மீது பதிவு செய்யப்ட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால் :

“நீதித்துறை கருத்து துறையின் கீழ் நின்றது. ராஜ்பவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி நக்கீரனுக்கு வந்திருந்தது அதை நாங்கள் புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம். அதற்காக கைது செய்யப்பட்டேன். இறுதியில் கருத்துச்சுதந்திரம் வென்றது. இதற்காக துணைநின்ற அனைவருக்கு நன்றி” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of