பாத்திரிக்கையாளர் சுட்டு கொலை.. மகளின் கண்முன்னே உயிரிழந்த தந்தை

596

உத்திர பிரதேசத்தை சேர்ந்த டெல்லி பத்திரிக்கையாளரான விக்ரம் ஜோஷி தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

இவர் நேற்று இரவு தனது மகள்களுடன் காசியாபாத்தின் விஜய் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுப்பட்டனர்.

பின்பு மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் விக்ரம் ஜோஷியை சுட்டனர். அந்த குண்டு விக்ரம் ஜோஷியின் தலையில் பாய்ந்ததால் அந்த இடத்தில் சரிந்து விழுந்தார். அதன் பின்பு மார்ம நபர்கள் சம்ப இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்.

விக்ரம் ஜோஷியின் மகள் கதறிய படி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி விக்ரம் ஜோஷி உயிரிழந்துள்ளார்.

தற்போது விக்ரம் ஜோஷி தாக்கப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவியில் பதிவான காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தாக்கியவர்களையும் தேடிகொண்டு வருகின்றன.

மரமநபர்கள் விக்ரம் ஜோஷியை தாக்கியதற்கு காரணம் என்ன என்று போலீஸார் விசாரித்தும் வருகின்றனர்.

உத்திர பிரேதசத்தில் பாத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அதிக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது விக்ரம் ஜோஷி உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.