யார் இந்த ஜே.பி.நட்டா? – பாஜக தேசிய தலைவராக வளர்ந்த கதை..!

485

பாஜக அகில இந்திய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தொற்றியிருந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் கடந்து வந்த பாதை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்:

பீகார் மாநிலம் பாட்னாவில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்தார்.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பாட்னாவில் முடித்தவர் ஜே.பி.நட்டா. நட்டாவின் தந்தை ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாட்னா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். அப்போது நட்டாவின் தந்தை இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தார். அந்த இயக்கத்தில் ஜே.பி நட்டா இணைந்தார்.

அதன் பிறகு பாட்னா பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் நட்டா.

மேலும்  இமாச்சல பிரதேசத்தில் தனது சட்டப்படிப்பு முடித்தபிறகு பாஜக இளைஞரணி தலைவரானார்.இமாச்சலில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,அமைச்சராகவும் இருந்தார்.2014 – 2019 ஆம் ஆண்டு வரையிலான மோடி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

தற்பொழுது பாஜக-வின் அகில இந்திய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of