பாஜக மூத்த தலைவர்களுடன் ஜே.பி நட்டா சந்திப்பு

324

பா.ஜ.க வின் தேசிய தலைவராக ஜே.பி நட்டா கடந்த 20 ல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்புக்கு பின் அக்கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி , முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களது வீட்டில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் நட்டா சந்தித்து பேசினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றேன். பாஜக தொண்டர்களுக்கு அவர் ஊக்கமளித்து வருகிறார்.

அவரை போல் அவரது ஆசியுடன் பாஜகவை மேலும் வலுப்படுத்த என்னால் முடிந்தவரை அயராது உழைப்பேன். ராஜ்நாத் சிங்கையும் மரியாதை காரணமாக சந்தித்தேன்.

தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தரும் ராஜ்நாத், நாட்டிற்கும் மற்றும் கட்சிக்கும் சிறப்பாக பணியாற்ற எனக்கும் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார். இவ்வாறு கூறினார்.

Advertisement