அவசர வழக்குகளை விசாரிக்க உரிய வழிமுறைகள் வகுக்கப்படும் – நீதிபதி ரஞ்சன் கோகாய்

472
Ranjan-Gogoi

உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நேற்று பதவி ஏற்றார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைதொடர்ந்து நீதிபதி ரஞ்சன் கோகாயிடம், அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்குமாறு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். 

அப்போது, ஒருவரை தூக்கிலிடப் போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் என்றும், அல்லது ஒருவரை நாளைக்கே வெளியேற்றப் போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் என்றும் கூறினார்.

அதை தவிர மற்றவற்றை அவசர வழக்குகளாக விசாரிக்க தனி விதிமுறைகள் வகுக்கப்படும் என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

பதவியேற்ற முதல் நாளிலேயே, எதற்கெடுத்தாலும் தொடுக்கப்படும் அவசர வழக்குகளுக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் முற்றுப்புள்ளி வைத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of