“லாஸ்லியா-க்கு ஜூலியே எவ்ளோ பரவாயில்ல” – சொன்ன ஆளு யார் தெரியுமா?

1328

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது.

16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் யார் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டிற்குள் வந்ததுமே பல கலவரங்கள் வெடிக்க துவங்கியது. காதல், சண்டை, சச்சரவு என விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான சினேகன் பதிலளித்துள்ளார்.

அதில் அவர் ரசிகர் ஒருவர் லாஸ்லியாவா ? ஜூலியா ? என கேள்வி எழுப்பியதற்கு என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர் என்றுள்ளார். மேலும் லாஸ்லியாவிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றதற்கு சகிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இவ்வாறு ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சினேகன் அதிர்ச்சியளிக்கும் பதிலளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of