வருடத்திற்கு ஒரு பெஸ்ட்டியா? கலாய்த்த நெட்டிசன்களுக்கு ஜுலி பதில்!!

870

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக வீரத்தமிழச்சியாக அடையாளம் பெற்றவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு காமெடி பீசாக அவரை மாற்றிவிட்டனர் நெட்டிசன்கள்.

நெட்டிசன்கள் என்ன தான் கலாய்த்தாலும், தொடர்ந்து சமூகவலைதளங்களில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜுலி.

முன்னதாக விதவிதமான ஆடைகள் அணிந்த தனது புகைப்படங்களுடன் அவ்வப்போது தனது பெஸ்ட்டி என மார்க் ஹம்ரனுடைய போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஜூலி தனது பெஸ்ட்டியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் பெஸ்ட்டியின் பெயர் மார்க்கிற்குப் பதில், ராஜ்ஹிதிபிரதன் என பெயர் பதிவிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், இந்த புதிய பெஸ்ட்டி யார்? பழைய பெஸ்ட்டி மார்க் ஹம்ரனுக்கு என்னாச்சு என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்த ஜுலி, இரண்டு பேரும் ஒருவர் தான் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement