உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்க உள்ளார்

370
ranjan-gogoi

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு பெற்றார். முன்னதாக தீபக் மிஸ்ராவின் பரிந்துரையின் பேரில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று முறைப்படி பதவி ஏற்க உள்ளார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும், ரஞ்சன் கோகாய் அடுத்து ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள ரஞ்சன் கோகாய், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டது என பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.