“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..!

933

கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல்ஸ் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, புதிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுகிறார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களை புகழ்ந்து பேசியும், பொங்கல் வாழ்த்துக்களை சொல்லியும் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார். இளம் வயது பிரதமரான இவருக்கு தமிழகத்தில் செல்வாக்கு அதிகம் உள்ளது.

தொடக்கத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த ஜஸ்டீன் ட்ரூடோ, ஆனால் தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தால் கடும் எதிர்ப்பை சந்தித்தார்.

இந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான வாக்கு எண்ணும் பணி முடிந்துள்ள நிலையில், ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி, முன்னிலையுடன் சேர்த்து 144 இடங்களிலும், எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி, முன்னிலையுடன் சேர்த்து 117 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.

இதன் மூலம் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி உறுதியாகிவிட்டது. ஆனால், ஆட்சியமைக்க 170 இடங்கள் தேவை என்பதால் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இந்திய வம்சாவளியான ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சியையும், ப்ளாக் கட்சியையும், கிரீன் கட்சியையும், சுயேட்சையும் ஜஸ்டின் நாட வேண்டியுள்ளது.