காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைதான் பாஜக-வுக்கு ஏற்படும் – கே.பி.முனுசாமி

370

மாநில உரிமை மீது மத்திய அரசு கை வைக்க நினைத்தால், காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைதான் பா.ஜ.க-வுக்கு ஏற்படும் என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.

நெல்லை அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதாவை ஏமாற்றி கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் என்று தெரிவித்தார். மக்களுக்காக நல்ல திட்டங்களை கொடுக்கும் இடத்தில் முதலமைச்சர் பழனிசாமி இருப்பதாகவும், அந்த திட்டங்கள் அனைத்தையும் தடுக்கும் இடத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.