“ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..” நெல்லை கண்ணன் கைது..! சீமானையும் கோர்த்துவிட்ட கே.எஸ். அழகிரி..!

816

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர் நெல்லை கண்ணன உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன் பேசியபோது, பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக கூறி பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரைத்தொடர்ந்து இன்று நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சனம் செய்ததற்காக, நெல்லை கண்ணனை கைது செய்திருக்கிறீர்கள். ஆனால், ராஜுவ்காந்தியை கொலை செய்து புதைத்தோம் என்று கூறியதற்கு சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், சீமானுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கண்டனமும் சொல்லியாச்சு, சீமானையும் கோர்த்துவிட்டாச்சு என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.