“சொந்தமாக பேசியதால் ரஜினி தவறாக பேசியிருக்கலாம்..” – கே.எஸ்.அழகிரி பளார்

352

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, தங்கபாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இதனையடுத்து, செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த கே.எஸ் அழகிரி, கூட்டணியில் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்புடையது என்றும், எங்களது கூட்டணி சுயமரியாதை உள்ள கூட்டணி எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என உறுதிபட தெரிவித்தார்.

துக்ளக்குடன் முரசொலியை ஒப்பிட்டு ரஜினி பேசியது தவறு தான் என்றும், சொந்தமாக பேசியதால் ரஜினி தவறாக பேசி இருக்கலாம் எனவும் கூறினார்.