“அரசின் தெளிவில்லாத கொள்கை..” – விளாசிய கே.எஸ். அழகிரி

190

தமிழக அரசின் தெளிவில்லாத கொள்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 118- வது பிறந்தநாளையொட்டி, அரியலூரில், தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சென்னையை விட பிற மாவட்டங்களி்ல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அரசின் திறமையின்மை, செயலின்மை மற்றும் தெளிவில்லாத கொள்கையால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of