‘ராணா’ மீண்டும் தொடக்கம்..? K.S.ரவிக்குமாரால் ரசிகர்கள் உற்சாகம்..!

994

தமிழ் சினிமாவின் ஈடு இனையற்ற கலைஞன்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து, இதுவரை முத்து, படையப்பா, லிங்கா ஆகிய 3 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். ஆனால், 4 என்ற கணக்கில் கூட்டணி திரைப்படங்கள் இருந்திருக்க வேண்டியது.

அதாவது, 2011-ஆம் ஆண்டு ராணா என்ற வரலாற்று திரைப்படத்தின் மூலம், ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் இணைய இருந்தனர். அப்போது ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அப்படம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த திரைப்படம் வெளியாகியிருந்தால், பாகுபலியின் சாதனையை அன்றே படைத்திருக்கும் என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தன்னை அழைத்து, ராணா படத்தின் கதையை மீண்டும் சொல்லும்படி ரஜினி கேட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போ நம்மால் இந்த கதையை பண்ண முடியுமா? என ரஜினி கேட்டதாகவும், முடியுமென தான் சொன்னதாகவும் இயக்குநர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியின் மனதில் அரசியல் இருக்கிறது என்பதால் இந்த படத்திற்கு தேவைப்படும் அளவு நேரம் ஒதுக்கி நடிக்க முடியுமா என என்னிடம் கேட்டார். ரஜினிகாந்த் பண்ணா நல்லா இருக்கும் என்று தெரிவித்தார். இந்த பேட்டியால், ராணா படம் மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.