தமிழக அமைச்சர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பேச வேண்டாம் – கீ.வீரமணி

224
k-veeramani

தமிழக அமைச்சர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பேச வேண்டாம் என்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீ.வீரமணி, ஐந்து கிராமங்களுக்கு ஒரு கிராம நிர்வாக அதிகாரி இருந்துது கணக்கெடுப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினார், தென்னை, தேக்கு, வாழைக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறிய வீரமணி, எட்டுவழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியபோது தென்னை ஒன்றுக்கு 40 ஆயிரம் வழங்கிய நிலையில், தற்போது தென்னைக்கு 1100 ரூபாய் என்பதை ஏற்கமுடியாதது என்று கூறினார். அமைச்சர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பேசி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கீ. வீரமணி எச்சரித்தார்.