காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல! பாமக மீது புகார் கூறிய உறவினர்கள்!

356

வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவில் பாமகவின் பங்கு இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறி வந்தனர்.

மேலும் தருமபுரியில் அன்புமணி போட்டியிட்டால் அவரை தோற்கடிப்போம் என குரு குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குருவின் தாய் , மகன் கனலரசன், சகோதரி மீனாட்சி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது,

“குருவின் மரணம் இயற்கையானதல்ல. பாமக தலைமைக்கு வன்னியர் சமூகம் உரிய பதிலை சொல்லும். குருவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என நாங்கள் கூறிய போது கூட எதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் இறந்துவிடுவார் என எங்களிடம் தெரிவித்தனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பை போலீஸார் தர வேண்டும்”

என்று அவர்கள் கூறினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of