காப்பான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

1141

சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் காப்பான். சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

நாயகியாக சாயிஷா நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக ஆர்யாவும், பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.