காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி பயணிகளிடம் விழிப்புணர்வு

103

தமிழக காவல் துறை சார்பில் ‘காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எதிராகவும்  குறிப்பாக பெண்கள் முதியோர்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  ஊட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் மத்தியில் போலீசார் துண்டு பிரசுரங்கள் மூலம் காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போலீசார் கூறுகையில்  காவலன் எஸ்.ஓ.எஸ் என்ற செயலியை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலமாக போலீசார்  பிரச்னை நடக்கும் இடங்களுக்கு விரைந்து வந்து தீர்வு காண ஏற்பாடு செய்வர் என்றனர்