மீண்டும் ஹீரோவானார் ரியோ

993
anchor rio raj next film

சின்னத்திரையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர் ரியோ ராஜ். இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வருகிறார்.இவரின் ஷோக்கென்றே ரசிகர்களும் உள்ளனர். இவர் முன்னதாகவே திரைப்படங்களில் கதாபாத்திர ரோலில் வந்து சென்றார். ஆனால் அது எதுவும் கை கொடுக்கவில்லை.

பின் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்தார். இந்நிலையில், ரியோ கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ’காதல் ஒன்று கண்டேன்’ என்று தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை மற்றும் தொகுப்பாளர் நட்சத்திரா நடிக்கிறார். மற்றும் அஸ்வின் குமார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரபல குறும்படமான ‘ஏனோ வானிலை மாறுதே’ வின் இயக்குனர் புனித் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டருக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of