காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு..! – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..!

602

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மறைந்த காடுவெட்டி குருவின் மகன், மருமகன் மற்றும் அவரது சகோதரரை முன்விரோதத்தால் பாமக பிரமுகர்கள் அரிவாளால் தாக்கப்பட்டனர்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் பாமக சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுத் தினம் கடந்த திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், இவரது மகன் கனலசரன்(24) என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரும்,பாமக பிரமுகரான சின்னப்பிள்ளை குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கனலசரன் ஆதரவாளர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை சின்னப்பிள்ளை, அவரது சகோதரர் காமராஜ் ஆகியோர் பிடித்து வைத்துள்ளனர். இதையறிந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது சகோதரர் மதன் ஆகியோர் சின்னபிள்ளை மற்றும் காமராஜிடம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கேட்கச் சென்றனர்.

அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் கனலரசன், மனோஜ், மதன் ஆகியோரை சின்னப்பிள்ளை, அவரது மகன் அய்யப்பன், சின்னப்பிள்ளை தம்பி காமராஜ், அவரது மகன் சதீஷ் ஆகியோர் தாக்கியதுடன், அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் குரு மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது சகோதரர் மதன் ஆகியோர் காயமடைந்தனர். கனலரசன் தரப்பு வெட்டியதில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த காமராஜ் மகன் சதீஷூக்கும் காயம் ஏற்பட்டது.

இதில் காயமடைந்த அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டனர். இது குறித்து மீன்சுருட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of