கஜா புயல் நிவாரணப் பொருட்கள்! அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்!

690

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள் ஏராளமான நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

பெறப்பட்ட நிவாரணப் பொருட்கள் நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைக்கப்பட்டு, அங்கிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாகை வாணிப கழக கிடங்கில் பணிபுரியும் ஊழியர்களும், அவர்களது உறவினர்களும் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வாகனங்களில் அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் வாணிப கழக கிடங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்கவில்லை என மக்கள் ஆங்காங்கே போராடிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கள் பதுக்கி வைக்கப்படுள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of