கஜா புயல் பாதிப்பு : நாகை செல்லவிருந்த முதலமைச்சர் பழனிசாமியின் பயணம் ரத்து

589

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாகை செல்லவிருந்த முதலமைச்சர் பழனிசாமியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயலால் உயிர் சேதம் மற்றும் ஏராளமான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள், பல ஆயிரம் ஏக்கர் விளை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்ய இருந்தார்.

இதனிடையே நிவாரணப்பணிகள் இன்னும் அங்கு முடிவடையாததால், முதலமைச்சரின் இன்றைய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இரு தினங்களில் நாகை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.