கஜா புயல் சேதம் எதிரொலி அண்ணா பல்கலைக்கழகம், பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

254
Anna-university

கஜா புயல் சேதம் எதிரொலியாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும், பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் அறிவித்துள்ளார்.

கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் இதுவரை 4 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இதேப்போல் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.