கஜா புயல் பாம்பன் – கடலூர் இடையே இன்று மாலை கரையை கடக்கும் – வானிலை மையம்

1450

புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி,மீ வேகத்தில் காற்று வீசும் என்று கூறியுள்ளது.

கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஒரு சில பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பா இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement