கஜா புயல் எச்சரிக்கை – இன்று நடைபெற இருந்த சில பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

281
guindy

கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து இன்று நடைபெற இருந்த சில பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுமார் 580 உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

புயல் எச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.