‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal

504

கடந்த சில காலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி முழுநேர அரசியல்வாதியாக மாறினார் உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் நீதி மையத்தின் தலைவராக இருந்து பல்வேறு அரசியல் சார்ந்த பணிகளை அவர் தற்போது செய்து வருகின்றார். இவை ஒருபுறம் இருக்க, ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’ படம் . தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் – ‌ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது, ஒரு ஆண்டிற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

thumb

தற்போது இந்த படத்தில் நடித்து வருவது குறித்து காஜல் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியன் 2 படத்தில் எனது வேடம் வித்தியாசமானது, ‘இதுவரை நான் நடிக்காத கதபாத்திரம் இது. வழக்கமாக எல்லோரும் கூறுவது தானே என்று கேட்க வேண்டாம். உண்மையிலேயே வித்தியாசமானது என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of