ஹாலிவுடில் நுழையும் இந்தியன் 2 நாயகி | Kajal Agarwal in Hollywood

489

அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை காஜல் அகர்வால் கமலுடன் தான் நடிக்கவிருப்பதை பற்றியும் புதிதாக தான் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தை பற்றியும் தெரிவித்தார்.

Agarwal

‘’இந்தியன் 2’’வில் எனது படப்பிடிப்புக்காக நான் காத்திருக்கிறேன். கமல் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது என்றார். மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஹாலிவுட் படமாக இருந்தாலும் நிறைய இந்தியத்தன்மை அதில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

image

சர்வதேச அளவில் எல்லோரையும் சென்றடையும். சகோதரர்களுக்குள் நடக்கும் இந்தக் கதை நிஜமாக நடந்தது. இந்தப் படம் மாண்டரின், காண்டனீஸ், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. மாநில மொழிகள் என்கிற வரையறைகளை, எல்லைகளை எல்லாம் சினிமா தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

kajal-agarwal