காஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

374

கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ‘குயின்’ தற்போது காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்று உருவாகியுள்ளது.

paris-paris

தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியானது. அதில் காஜல் நடித்துள்ள தமிழ் டீசரில் ஆபாச வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், காஜல் அவரது தோழியுடன் தோன்றும் காட்சி ஆபாசமாக இருப்பதாகவும் பலரும் விமர்சித்தனர்.

Movie-Paris-Paris

இந்நிலையில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்பிய படக்குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்சார் துறை பல இடங்களில் காட்சிகளின் சில பகுதிகளை மங்க செய்தனர். சில காட்சிகளில் ஆடியோவை மட்டும் வெட்ட, சில காட்சி ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்டி உள்ளனர்.

image

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of