சாண்டிக்கும் எனக்கும் இரண்டு குழந்தைகளா? – மனம் திறந்த காஜல் பசுபதி..!

795

பிரபல தொலைக்காட்சி ஒன்றின் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் ஒருவராவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற நாள் முதற்கொண்டு அவருடைய முன்னாள் மனைவி காஜல் பசுபதி அவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்த வண்ணம் இருந்துள்ளார்.

சாண்டிக்கு ஆதரவாக பல கருத்துக்களை காஜல் பசுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் இவர்கள் இருவரும் மீண்டும் வாழ்வில் இணைய போகிறார்கள் எனவும் கூறிவந்தனர்.

இதனை அறிந்த காஜல் பசுபதி நாங்கள் இருவரும் இனிமேல் இணையப் போவதில்லை. நான் சாண்டிக்கு நல்ல ஒரு நண்பராக இருப்பேன் என்று கூறியிருந்தார். டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் நடிகை காஜல் பசுபதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர் அதற்குப் பின்பு சில்வியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் காஜல் பசுபதிக்கும் சாண்டிக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றன எனவும் பலரும் சமூக வலைத்தளத்தில் செய்திகளை பரப்பி வருகின்றனர் . இது முற்றிலுமாக பொய்யென காஜல் பசுபதி தற்போது தெரிவித்துள்ளார் .

மேலும் ரசிகர் ஒருவர் நீங்கள் இருவரும் பிரிவதற்கான காரணம் என்ன ? என கேள்வி எழுப்பியுள்ளார் . அதற்கு பதிலளித்த காஜல் பசுபதி, “எல்லாம் நான் செய்த லவ் டார்ச்சர் தான், வல்லவன் பட ரீமாசென் போல நான் பல டார்ச்சர்கள் சாண்டிக்கு செய்து உள்ளேன் ஆகையால் அவர் என்னை விட்டு பிரிந்து விட்டார் ” என்று கூறியிருந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of