கலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..!” கேட்டவுடன் புல்லரிக்கும்..!

2428

சினிமாவிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி கலைஞர் கருணாநிதி பேசும் வசனங்கள் இன்றளவும் சூடு குறையாமல் உள்ளது. அவர் பேசும் கருத்துக்கள் கேட்டவுடன் சிறிது நேரம் புல்லரிக்க வைத்து விட்டு, “அட ஆமால” அப்படி என்ற உணர்வை தரும். அப்படி அவர் கூறியவற்றில், 10 பொன்மொழிகளை தற்போது காண்போம்..,

1. ஏனப்பா முழிக்கிறாய்.., தூங்குபவனை எழுப்பினால் முழிக்கத்தானே செய்வான்..

2. தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை. அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.

3. ஆசைகள் சிறகு ஆகலாம். அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது.

4. அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது.

5. துணிவிருந்தால் துக்கமில்லை… துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை…

6. குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்… கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும்.

7. மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமேர் அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்.

8. உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்.

9. மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.

10. புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்.., உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.

போனசாக இன்னும் ஒரு நிகழ்வு,

“விதவை என்ற சொல்லில் கூட பொட்டு இல்லை” என்று கவிதை ஒன்று அந்த காலக்கட்டத்தில், இருந்து வந்தது. அதற்கு பதிலடி தரும் வகையில், விதவை என்பது வடமொழி வார்த்தை, கைம்பெண் என்பதே தமிழ் வார்த்தை.

இதில் இரண்டு பொட்டு உள்ளது என்று கூறி, விதவைகளின் மறுமணம் குறித்து அருமையாக கூறியிருப்பார். இவ்வாறு இவர் பேசியுள்ள கருத்துகள் நையாண்டியும், புரட்சியும் கலந்து இருக்கக்கூடியவை.