கார்த்தி, விஜய் சேதுபதி, பிரபுதேவா, யுவன் உள்ளிட்ட 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது!

392

இயல், இசை நாடக துறையில் சிறந்து விளங்கும் 201 பேருக்கு முதலமைச்சர் பழனிசாமி கலைமாமணி விருதுகளை வழங்கினார்.

2011 முதல் 2018ஆம் ஆண்டு வரையில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்திக், விஜய்ஆண்டனி, சசிக்குமார், பிரசன்னா, பரவை முனியம்மா ஆகியோருக்கு முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

இதேபோன்று நகைச்சுவை நடிகர்கள், எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி, சிங்கமுத்து. பாண்டு மற்றும் இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்ளிட்ட 201 பேருக்கு முதலமைச்சர் பழனிசாமி கலைமாமணி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இதில் மூத்த கலைஞர்கள் பலருக்கு முதலமைச்சர் பழனிசாமி அவர்களது இருக்கைக்கே சென்று விருதுகளை வழங்கினார்.

Advertisement