கலாம் சாட் மற்றும் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

803

கலாம் சாட் மற்றும் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டை இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இரவு 11 மணி 37 நிமிடத்திற்கு பி.எஸ்.எல்.வி சி-44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட் மூலம் கலாம் சாட், மைக்ரோசாட்-ஆர் என்ற இரு செயற்கைக்கொள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோள் புவி ஆய்வு மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 3டி கேமரா, லேசர் போன்ற தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் மிகவும் எடை குறைவான கலாம் சாட் செயற்கைக்கோளை தயாரித்த தமிழக மாணவர்கள் குழுவுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of