ஊரை காக்க மக்களின் “செக் போஸ்ட்” – 24 மணி நேரமும் கண்காணிக்கும் இளைஞர்கள்..!

339

கள்ளக்குறிச்சி மாவட்டம் பணாம்பட்டு கிராமத்தில் ஊர் மக்களே ஊருக்குள் நுழையும் வாயிலில் செக்போஸ்ட் அமைத்து அதில் 24 மணி நேரமும் காவலுக்கும் சுழற்சி முறையில் ஆட்கள் நியமித்துள்ளனர்.

ஊருக்குள் இருந்து வெளியே செல்வவர்கள் வெளியே சென்றுவிட்டு ஊருக்குள் நுழைபவர்கள் வெளியாட்களை அடையாளம் காண்பது ஊர்க்காரர்களாக இருந்தாலும் வெளியூர் ஆட்களாக இருந்தாலும் ஊருக்குள் நுழையும் முன்பு ஒரு நிபந்தனை.

அந்த செக்போஸ்ட் முகப்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர், சோப்பு, டெட் ஆயில் வைத்துள்ளனர். அப்படி வரும் நபர்கள் ஒவ்வொருவரும் கை, கால்களை கழுவிக்கொண்டு அதன்பிறகே ஊருக்குள் நுழைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இதை கண்காணிக்கவும், வெளியூர் ஆட்கள் தேவை இன்றி ஊருக்குள் நுழைவதையும் கட்டுப்படுத்துவதற்கு செக்போஸ்ட் முன்பு வெயிலுக்கு பந்தல் அமைத்து அங்கு ஆட்கள் 24 மணி நேரமும் காவல் பணி செய்து வருகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் சுய கட்டுப் பாடுகள் மூலமும் இது போன்று கடைபிடித்தால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும் என்கிறார்கள் காவல் இருக்கும் இளைஞர்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of