2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

409

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக திகழும் நடிகர் சூர்யாவும் எதிர்ப்பு மற்றும் அறிக்கையும் வெளியிட்டார். அந்த கருத்துகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது மட்டுமல்லாமல் அதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அவரது ரசிகர்கள் அவருக்கு பலவகையில் இருந்து ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் கள்ளகுறிச்சி பேருந்து நிலையம் சுற்றி உள்ள சுவர்களில் போஸ்டர்களை ஒட்டி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர். அந்த போஸ்டரில் நீட் தேர்வை எதிர்த்த இளைய தலைமுறையின் தலைவனே.. இளைய காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் செய்ய வரோம்..

எனவும் வேறு போஸ்டரில் 2k கிட்ஸ் காமராசரே எனவும் சர்ச்சை வாசகங்கள் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இது போன்று முன்னனி நடிகர்களின் ரசிகள் இது மாதிரியான போஸ்டர்களில் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகள் போஸ்டரை ஒட்டி அரசியல் தலைவர்களுக்கு பயத்தை காட்டுகின்றன.