கல்லணை கால்வாயில் உடைப்பு – 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

1061

தஞ்சையில் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், 5ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கால்வாயில் இருந்து பிரியும் கல்யாண ஓடை வாய்கலில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 10 மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், நாற்று நட்டு 10 நாட்களே ஆன நாற்றாங்கால்கள் என 5ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கல் நீரில் மூழ்கின. விளை நிலங்களில் தண்ணீர் வடியாததால், பயிர்கள் அனைத்தும் அழுகி நாசமாகியுள்ளன.

நாற்றங்கால்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சாலைகளில் கிடக்கின்றன. இதனால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement